விருதுநகர்: இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம்; காவல்துறை எச்சரிக்கை

591பார்த்தது
மருத்துவப் படிப்பிற்கான இருக்கைகளை ஏற்பாடு செய்து தருவதாக போலியான வாக்குறுதிகள் அளித்து பணம் வசூலிக்கும் இடைத்தரகர்களிடம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சிக்காமல் இருக்க சென்னை மாநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு (CCB) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரையில் புகார்கள் வரவில்லை என்றாலும், அரசு நடத்தும் அதிகாரபூர்வ ஆலோசனை முறையிலேயே (Counselling) சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா வலியுறுத்தியுள்ளார். இடைத்தரகர்களை நம்பாமல், அரசு விதிமுறைகளின்படி நேரடியாக கல்லூரிகளை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி