விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்னிலைகுடியில், ரூ. 6.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய 100 சமுதாய வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளை வழங்கி, புதிய வீடுகளை பார்வையிட்டார். இந்த சமத்துவபுரத்தில் சமுதாயக் கூடம், நூலகம், குழந்தை நல மையம், விளையாட்டு மைதானம், பூங்கா, சாலை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.