விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், கடந்த காலங்களில் பட்டாசு வெடி விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பெற்றோரை இழந்த குழந்தைகளின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், திராவிட ஆட்சியில் நிவாரணம் வழங்குவதோடு மட்டுமல்லாமல், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவையும் தமிழக அரசே ஏற்று உதவித்தொகை வழங்கி வருவதாக அவர் கூறினார்.