விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் முன்னிலையில் தொடங்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் இத்திட்டத்தை துவக்கி வைத்த நிலையில், அருப்புக்கோட்டையில் அமைச்சர் துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில் அமைச்சர் பணியாளர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும், பணியாளர்களுக்கு டிபன் பாக்ஸ்களையும் அமைச்சர் வழங்கினார். தனியார் ஒப்பந்ததாரரை அழைத்து, எப்போதும் தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.