விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆவுடையாபுரம் ஊராட்சிப் பகுதியில், புதிதாகக் கட்டப்பட உள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.