தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் 10,000 முகாம்கள் நலத்திட்டப் பயன்கள் மற்றும் 1.80 இலட்சம் புதிய பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்ட பயன்கள் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் 1533 பயனாளிகளுக்கு ரூ. 7 கோடியே 90 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.