தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறி வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்தக் கூட்டணி யாருடன் இணைந்தாலும் கவலை இல்லை என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக வருவார் என்றும் அவர் உறுதியளித்தார். அவர் அமைக்கும் கூட்டணியே வெற்றி கூட்டணி என்றும், மதச்சார்பற்ற முற்போக்கு இந்தியா கூட்டணி தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்.