விருதுநகரில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டின் கூட்டுறவுத் துறை பாரம்பரியமிக்கது என்றும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திலும், கிராமப்புற வளர்ச்சியிலும் இது முக்கியப் பங்காற்றுவதாகவும் தெரிவித்தார். இத்துறை பொதுமக்களை இணைத்து கிராமப்புறங்களில் இயக்கமாக செயல்பட்டு, மக்களின் அடிப்படை முன்னேற்றத்திற்கு காரணமாகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் தரமான பொருட்கள் வழங்கப்படுவதாகவும், தக்காளி போன்ற காய்கறிகளின் விலை உயரும்போது, கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்து நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவதாகவும் அவர் கூறினார்.