விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் இன்று அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டார். அம்மா உணவகங்களில் உணவின் தரம், தூய்மை, இருப்பு குறித்து ஆய்வு செய்த அவர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். மேலும், அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.