நியாய விலை கடையை ஆய்வு செய்த எம்எல்ஏ
விருதுநகர் ரோசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையை தமிழக அரசு கழகத்தின் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், பொதுமக்களுக்கு முறையாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா, வேறு ஏதும் குறைகள் உள்ளதா எனவும் கேட்டறிந்தார்.