விருதுநகர் அருகே வேன் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் 3 வயது சிறுமி உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம், தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை நலம் விசாரித்தார். அவர்களுக்குத் தகுந்த மருத்துவ உதவிகளைச் செய்யுமாறு மருத்துவரிடம் கேட்டுக்கொண்டார். அவருடன் த.வெ.க. கட்சி நிர்வாகிகளும் உடன் வந்து காயமடைந்தவர்களின் நலன் விசாரித்தனர்.