தேசிய குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு பேரணி

0பார்த்தது
விருதுநகரில் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டார். கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் குழந்தை திருமணம் தடுப்பு, பாலியல் தொந்தரவு குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் செல்லப்பட்டன.