விருதுநகரில் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க முயலும் திமுக அரசை கண்டித்து அதிமுகவினரும் கூட்டணி கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக தலைமை அறிவுறுத்தலின் பேரில் தமிழகம் முழுவதும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாஜக, அமமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.