தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

1பார்த்தது
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அல்லம்பட்டி, பாண்டியன் நகர், சூலக்கரை, சத்திரரெட்டியாபட்டி, லட்சுமி நகர், மீசலூர், அமத்தூர், சின்னவள்ளிக்குளம் உள்ளிட்ட இடங்களில் இன்று காலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்புடைய செய்தி