தமிழ்நாட்டைச் சார்ந்த 600 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில், 550 கிறிஸ்தவர்களுக்கு தலா ரூ. 37,000/- வீதமும், 50 கன்னியாஸ்திரிகள்/அருட்சகோதரிகளுக்கு தலா ரூ. 60,000/- வீதமும் மானியம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 01.11.2025-க்குப் பிறகு புனித பயணம் மேற்கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படிவங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களில் இலவசமாகப் பெறலாம் அல்லது www.bcmbcmw.tn.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.02.2026-க்குள் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.