விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும், 'தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலன் சட்டம் 2007'-ன் கீழ், வரும் 30.06.2026-க்குள் தங்களைப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே பதிவு செய்து புதுப்பிக்காத இல்லங்கள் உடனடியாகப் பதிவைப் புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்வது குறித்த முழு விவரங்களை இணைக்கப்பட்டுள்ள QR Code மூலம் காணொளி வாயிலாக அறியலாம்.