விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு பென்ஷன், காலிப் பணியிடங்களை நிரப்புதல், தேசிய மருத்துவக் காப்பீடு, ஈமச்சடங்கு நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். காவல்துறையினர் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.