சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்துகொள்ள டெம்போ வேனில் சென்றனர். விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி அக்ரஹார மேம்பால தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வேனில் சென்ற குமரன் (65) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 11 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.