மதுரை அருகே திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 39 வயது கூலித் தொழிலாளி பெருமாள், புழலக்கோட்டை விளக்கில் சாலையைக் கடக்க முயன்றபோது தனியார் கல்லூரிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.