விருதுநகரில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரும் 14ம் தேதி நடைபெற உள்ள 4-வது மாபெரும் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, கெளசிகா நதிக்கரைகளில் 5 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆற்றங்கரை ஓரங்களில் விதைகளை நட்டனர். இது புத்தகத் திருவிழாவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.