விருதுநகர் மாவட்டம் துலுக்கப்பட்டி அருகே கோவில்புலி குத்திக்கு செல்லும் முக்கில், திருச்சியிலிருந்து கோவில்பட்டி அருகில் உள்ள அந்தோணியார் கோயிலுக்குச் சென்ற வேன் நிலைத்தடுமாறி எதிர்திசையில் சென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மொத்தம் 19 பேர் பயணித்துள்ளனர். சிறு சிறு காயங்களுடன் அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து வச்சக் காரபட்டி காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.