விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் குற்ற தடுப்பு நடவடிக்கையாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். பட்டாபிராமர் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ராஜேஷ், சதீஷ்குமார், விக்னேஸ்வரன் ஆகியோரை விசாரித்தபோது, அவர்களிடம் வாள் மற்றும் கத்தி இருந்தது கண்டறியப்பட்டது. மூவரையும் கைது செய்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும், பந்தல்குடி சாலையில் உள்ள மதுபான பாரில் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த மருதுபாண்டி என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.