வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் அதிமுக சார்பில் மனு

3பார்த்தது
விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில், இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருவதாகவும், விருதுநகர் மாவட்டத்திலும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) வீடு வீடாக கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருவதாகவும், சில இடங்களில் ஆளும் கட்சி BLA 2 மூலம் படிவங்கள் பெறப்படுவதை தவிர்க்க வேண்டும் என்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்தராவிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்கள் மணிகண்டன், சீத்தாராமன், குருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளர் லோகையாசாமி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you