கெமிக்கல் தொழிற்சாலையை மூடக்கோரி மனு

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் கெமிக்கல் தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு, 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகி வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரால் நிலத்தடி நீர் மாசுபட்டு, கிணற்று நீரைப் பயன்படுத்தினால் தோல் நோய்கள் ஏற்படுவதாகவும், இதனால் விவசாயம் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும், இல்லையெனில் கிராமத்தை விட்டு வெளியேறுவோம் என கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி