அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

54பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் அனுப்பன்குளம் பஞ்சாயத்து உட்பட்ட ரத்னாபுரி கிராம மக்கள், தார் சாலை, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் நடமாட அச்சப்படுவதாகவும், சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி