விருதுநகர் அருகே உள்ள ஏ.ஏ.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொங்கல் விழா பாரம்பரிய உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் சேகர் தலைமை தாங்கினார். பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். மாணவ மாணவியருக்காக கோலப்போட்டி, வண்ணம் தீட்டுதல், சிலம்பாட்டம், கிராமிய நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. ஆசிரியர்களுக்கென கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. பேராசிரியர் முனைவர் செந்தில் மகாராஜ் ஏற்பாடுகளைச் செய்தார்.