பாஜக நகராட்சியை கேள்வி எழுப்பி நகர் முழுவதும் சுவரொட்டிகள்

2பார்த்தது
விருதுநகர் நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் 85-90% பணிகள் மட்டுமே நிறைவடைந்த பாதாள சாக்கடை திட்டத்தால், அடிக்கடி குழாய்கள் அடைப்பு ஏற்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பி, விருதுநகர் பாஜக சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் 'ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி, அவதியில் விருதுநகர் மக்கள்' என சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ராமமூர்த்தி சாலையில் அடைப்பு ஏற்பட்ட பாதாள சாக்கடை குழாய்களை நகராட்சி ஊழியர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி அகற்றும் காட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் திறமையின்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி