விருதுநகரில், தேசபந்து மைதானம் முன்பு உள்ள தபால் நிலைய அலுவலகம் முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் கூட்டணிக் கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு சமையல் எரிவாயு விலையை ரூ1000 உயர்த்தியதைக் கண்டித்தும், ரயில்வேயில் 30000 பணியிடங்களை குறைத்ததைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.