திமுகவின் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

285பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ஈஞ்சார் கிராம நிர்வாக அலுவலர் யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் ராஜா முத்துப்பாண்டி மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி கூடலிங்கம் மற்றும் அவரது மகன் வெயில் முத்து மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் விருதுநகர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டத் தலைவர் முனியசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் மாவட்டத் தலைவர் முருகேசன், வட்டச் செயலாளர் கார்த்திகேயன், வட்டப் பொருளாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி