விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இல. திருப்பதி தலைமையில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்
நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கல்வி உரிமையைக் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.