விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக, மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அக்பர்ஷா, மாரிமுத்து, மணிகண்டன், கண்ணன், பெரியசாமி, அசன் ஹலி ஆகியோர் முன்னிலையில் இப்போராட்டம் நடைபெற்றது.