விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி கிராமத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர். சீனிவாசன் கலந்துகொண்டு திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்திற்கு மட்டும் தான் விவசாயிகளுக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே முதலமைச்சர் நமது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றும், மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் உரம், விதை, இடுபொருள் கொடுக்கின்ற வரும் நம் முதல்வர் தான் என்றும் பேசினார்.
மேலும் இந்த நிகழ்வில் தலைமைகழகப் பேச்சாளர் கவிஞர் மார்சல் முருகன் திருச்செல்வன், நகரச் செயலாளர் எஸ் ஆர் எஸ் தனபாலன், யூனியன் சேர்மன் திருமதி சுமதி ராஜசேகர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணகுமார், தொமுச மண்டல பொதுச் செயலாளர் ராஜ செல்வம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.