விருதுநகர்: வாகன சோதனையின் போது ரேசன் அரிசி பறிமுதல்

806பார்த்தது
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே, தாணிப்பாறை சந்திப்பில் இன்று போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த TATA Ace வாகனத்தை மறித்தபோது, ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார். வாகனத்தை சோதனையிட்டதில் சுமார் 600 கிலோ ரேசன் அரிசி கடத்தப்பட்டது தெரியவந்தது. போலீசார் ரேசன் அரிசி மற்றும் வாகனத்தை கைப்பற்றி, குற்றவாளியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி