விருதுநகர் அருகே நடுவப்பட்டி பகுதியில் கெங்கம்மாள் கோவிலுக்கு வந்த இரண்டு இளைஞர்கள் மாயமாகி, ஐந்து நாட்களுக்குப் பிறகு உரை கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு அனுமதி வழங்காமல், இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு
வேலை மற்றும் 25 லட்சம் ரூபாய் வழங்கக் கோரி, 50க்கும் மேற்பட்ட உறவினர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.