விருதுநகர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தேசிய மீன்வள டிஜிட்டல் தளம் (NFDP) இணையதளத்தில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் மற்றும் தமிழ்நாடு மீனவர் நலவாரிய உறுப்பினர்கள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மீனவர் குழு விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் பெற NFDP-யில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மற்றும் CSC கணினி மையங்களை அணுகி பதிவு செய்யலாம்.