விருதுநகரில் கடந்த பத்து ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த அலுவலகம், 2011 முதல் 2016 வரை மாச பாண்டியராஜன் எம்எல்ஏவாக இருந்தபோது செயல்பட்டது. அதன் பிறகு, பத்து ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த சீனிவாசன் இந்த அலுவலகத்தைத் திறக்கவே இல்லை. தற்போது புதர் மண்டி கிடக்கும் இந்த அலுவலகத்தை புதிய சட்டமன்ற உறுப்பினர் செயல்பாட்டிற்குக் கொண்டு வருவாரா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.