விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025-2026 கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 603 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்குவது குறித்து ஒன்றிய வாரியாக நியமிக்கப்பட்ட தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களின் முன்னேற்றத்தை கண்காணிக்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது.