விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், ரூ. 708 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என். ஓ. சுகபுத்ரா தலைமையில், மேலாண்மை இயக்குநர் திரு. சமீரன் மற்றும் அரசு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இத்திட்டம் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 1,331 கிராமக் குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு ஜல் ஜீவன் மிஷன் நிதி மூலம் நிறைவேற்றப்படவுள்ளது.