விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பூமாலை வணிக வளாகத்தில் காலியாக உள்ள கடைகளை வாடகைக்கு விட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில், புல்லக்கோட்டை சாலையில் அமைந்துள்ள இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 04562-252036 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.