தொழில் முனைவோருக்கான சட்ட விழிப்புணர்வு சிறப்பு முகாம்

0பார்த்தது
விருதுநகர் தூய இன்னாசியார் ஆலய வளாகத்தில் மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழு சார்பில் தொழில் முனைவோருக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் அவர்களது குழந்தைகள் கலந்துகொண்டனர். முகாமில், தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தாட்கோ மாவட்ட மேலாளர் (பொ) மஞ்சுளா விளக்கினார். தொழிலாளர் சட்டங்கள் குறித்து நெறியாளர் சகாய வினோமீன் ராஜ் விரிவாக எடுத்துரைத்தார். மதுரை சட்ட விழிப்புணர்வு ஒருங்கிணைப்பு குழுவின் முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆலய பங்கு தந்தை அருள் ராயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி