விருதுநகர் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், புத்தகம் வாசிப்பதன் அவசியத்தையும், பனை விதைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். பசுமைப்பரப்பை அதிகரிக்கும் நோக்கில் 5000 பனை விதைகள் நடப்பட்டதாகவும், இதன் மூலம் மாவட்டத்தின் பசுமைப்பரப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மரம் நடுவதன் அவசியத்தைப் புரிந்து செயல்பட்டால் மாவட்டத்திற்கும் நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என்றும் ஆட்சியர் கூறினார். நிகழ்ச்சியின் இறுதியில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.