விருதுநகர் மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், விருதுநகர் மண்டலத்தில் நடப்பு கே. எம். எஸ் 2025-2026 சம்பா பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி, இதுவரை 34 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2545/- மற்றும் பொதுரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2500/-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.