கல்லூரி விடுதிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

1பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்காக மொத்தம் 48 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 25 பள்ளி விடுதிகள், 3 கல்லூரி விடுதிகள் மற்றும் மாணவியர்களுக்காக 18 பள்ளி விடுதிகள், 2 கல்லூரி விடுதிகள் அடங்கும். பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர் சேர தகுதியுடையவர்கள் ஆவர். இந்த விடுதிகளில் எவ்வித செலவினமும் இன்றி பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்தி