விருதுநகரில் இன்று காலை 6 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாவட்ட நிர்வாகம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததால், மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடியே பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த திடீர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.