விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா முன்னிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில், குடிநீர் வடிகால் வாரிய திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு பணிகளை காலதாமதமின்றி முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.