விருதுநகரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம், மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், மாநில துணைத்தலைவர் அம்சராஜ் முன்னிலையில், 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கி, பணிகளை முறைப்படுத்த வேண்டும், புற ஆதாரம் மற்றும் ஒப்பந்த முறை பணி நியமனத்தை கைவிட வேண்டும், நில அளவர் பணியிடங்களை நிரப்பி ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், புதிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.