விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து அல்லம்பட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட தி.க. தலைவர் வீரமணி, பெண்களுக்கான கேஸ் அடுப்பு திட்டத்தை கலைஞர் கொண்டு வந்ததாகவும், தற்போதைய மத்திய அரசு அதை பறித்துக்கொண்டதாகவும் கூறினார். அதிமுகவில் அண்ணா, திராவிடம், முன்னேற்றம் எதுவும் இல்லை என்றும், முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுகவின் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் உள்ளதாகவும், மகளிர் உரிமைத் தொகை வழங்க விடாமல் தடுக்க முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.