தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில், மாவட்டத் தலைவர் பரமசிவம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசின் உழவர் அலுவலர் தொடர்புத்திட்டம் UATT 2.0 திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும், வேளாண் துறையினர் செய்ய வேண்டிய பணிகளை தோட்டக்கலைத் துறையினர் செய்ய சொல்வதால் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் தொழில்நுட்பம் சென்றடைவதில் சிக்கல்கள் ஏற்படும் என்றும், இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். வேளாண் விஞ்ஞானிகள் குழு அமைத்து பரிந்துரையின் அடிப்படையில் செயல்படாத இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களுக்கு அவசர கால பணியிடப் பயிற்சி செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.