விருதுநகரில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத்தலைவரும் பேட்டிதமிழ் வழியில் பயின்றவர்களுக்கு உயர்பதவி கிடைக்காமல் அதிமுகவும், திமுகவும் தடுத்து நிறுத்தியுள்ளது என்றும் மத்திய அரசுப்பள்ளிகளில் கட்டாயம் தெலுங்கு படிக்க வேண்டும் என்று தெலுங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தைப் போல் தமிழக அரசும் உத்தரவு பிறக்க வேண்டும் என தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழக சட்டமன்றத்தில் காவேரி மேலாண்மை வாரியம், தமிழ்நாடு தமிழகம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் ஆளுநர் ஆர். என். ரவிக்கு எதிராக நான் தான் முழக்கம் எழுப்பினேன். அன்றைக்கு உரிமை மீறலாக தெரியவில்லையா என்றும் ஆளுநருக்கு எதிராக முழக்கம் விட்டபோது கை தட்டி ரசித்த திமுக அமைச்சர் சேகர்பாபு, நீங்கள் தவறு செய்தால் அதனை சுட்டிக்காட்டிய போது ஆத்திரம் வருகிறது. கவர்னர் தவறு செய்து அதனை சுட்டிக்காட்டினால் திமுக வரவேற்கிறது. சென்னையில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி பாதிக்கப்படும் தென் மாநிலங்களின் முதல்வர்கள், எம்பிக்கள் அரசியல் கட்சித் தலைவர்களை ஒன்றிணைத்து எதிர்ப்பை பதிவு செய்த திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.