கிழக்கு மாவட்ட தமிழக வெற்றி கழகம் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 37-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் தளபதி S. P. செல்வம் தலைமையில் புரட்சித் தலைவர் எம். ஜி. ஆர் அவர்களின் 37-வது நினைவு தினத்தை ஒட்டி விருதுநகர் கருமாதிமடத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் நகரம், ஒன்றியம், கிளை நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.